• Dec 25 2024

தர்ஷிகா மீது விஷாலுக்கு காதல்...! விஷால் மீது பவித்ராவுக்கு காதலா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டண் இல்லை இருப்பதை வைத்து வெளியே காட்டுவோம் என பிக் பாஸ் டீம் கஷ்ட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சீசனுக்கு சீசன் காதல் கன்டென்ட் கொடுப்பதற்கு என்றே ஜோடிகள் பறந்து வந்து விடுவார்கள். அப்படி இந்த சீசனில் 2 காதல் புறாக்கள் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


விஷால் ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். இதில் பிக் பாஸ் வீட்டுக்குள் கேட்கவா வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விளையாட்டாக விஷால் மற்றும் தர்ஷிகா காதல் கான்செப்ட்டை வைத்து ஓட்டினார்கள்.


அப்போதே அவர்களுக்குள் ஒரு சின்ன நெருக்கம் ஏற்பட்டது. தர்ஷிகா நிஜமாகவே விஷாலை காதலிக்க ஆரம்பித்து விட்டார் போல. விஷால் தர்ஷிகாவிடம் நன்றாக பேசினாலும் தன்னுடைய ஆண் நண்பர்களிடம் அப்படியெல்லாம் என்னுடைய மனதில் எதுவும் கிடையாது என சொல்லி வருகிறார்.


இந்த நிலையில் தர்ஷிகா விஷாலை காதலிக்கிறாரோ என ஆர் ஜே ஆனந்தி மற்றும் பவித்ராவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.  இருவரும் வெளியில் இருந்து பேசி கொண்டிருக்கிறார்கள் தர்ஷிகாவிடம் பேச முடியவில்லை. எப்போதும் விஷால் கூடவே இருக்கிறார். சாப்பிடாட்டி அக்கறையா கேட்கிறார்.  பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததே காதலிப்பதற்காக தான் என்பது போல் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் சண்டை தான் வரப்போகிறது என்று சொல்கிறார் பவித்ரா. 



Advertisement

Advertisement