• Dec 26 2024

மோசமாக எடிட் செய்யப்பட்ட சாரா புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! வேதனை பகிர்ந்த vj அர்ச்சனா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல தொகுப்பாளினி லிஸ்ட்டில் இருப்பவர் தான் விஜே அர்ச்சனா. இவருடைய மகள் பல சின்னதிரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து அர்ச்சனா கண்கலங்கி பேட்டி அளித்துள்ளார். 


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தில் சாரா மற்றும் அர்ச்சனா இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிட அர்ச்சனா, எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இப்போ கூட அவளிடம் சண்டை போட்டுட்டு தான் வந்தேன்.


ஏன் என்றால், சமீபத்தில் அவள் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தில் சாராவுடன் ஒரு பொண்ணும் இரண்டு பசங்களும் இருந்தார்கள். ஆனால் சக மாணவன், சாராவும் ஒரு பையனும் ஒண்ணா இருப்பது போல் கிராப் செய்து. இவர்கள் காதலர்கள் என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


நான் அந்த புகைப்படம் பார்த்தவுடன் எனக்கு டக்குனு கோபம் வந்துவிட்டது. நான் சாராவை குறித்து மட்டும் யோசிக்கவில்லை. அந்த பையனை பற்றியும் தான் கவலைப்பட்டேன் அவனுடைய வாழ்க்கை பற்றியும் யோசித்தேன் என்று அர்ச்சனா மன கவலையுடன் தெரிவித்து உள்ளார்.   

Advertisement

Advertisement