• Feb 25 2025

சூர்யா ரசிகர்கள் செய்த செயலை பாருங்க..! இணையத்தை வைரலாகிய வீடியோ...

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

சினிமாவில் மாத்திரமின்றி சமூக நலனிலும் அக்கறை செலுத்தி வரும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா சிவகுமார் அகரம் எனும் அறக்கட்டளை நிறுவனத்தினை நடத்தி வருகின்றார். சமீபத்தில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்துள்ளார். படிப்பிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர் தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக சென்னையில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளதாக கூறியிருந்தார்.


கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியாகியிருந்த கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தமையினால் மிகவும் சோகத்திற்கு அழகிய இவர் தற்போது செய்துள்ள செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவர் செய்து வரும் இந்த செயல் தற்போது அனைவருக்கும் எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.


இந்த நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர்கள் செய்த செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள 500க்கு மேற்பட்ட அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு EXAM STATIONARY KIT வழங்கப்பட்டுள்ளது.வண்டலூர், கண்டிகை, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள 3 அரசுப்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இவ் உபகரணங்கள் வழங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


தற்போது இவர்கள் குறித்த மாணவர்களிற்கு இவ் உபகரணங்கள் வழங்கும்போது எடுத்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement