• Dec 26 2024

எங்களுக்கும் பப்ளிசிட்டி தேவை... 'ரத்னம்' படத்தின் கதையை வெறித்தனமாக கூறிய இயக்குநர் ஹரி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் நடிகர் விஷாலுக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் அன்டனி  திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இவருடைய கேரியரிலே இந்த படம் தான் 100 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படம் தான் 'ரத்னம்' . ஏற்கனவே ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது 'ரத்னம்' படத்தின் கதை என்ன என்பது தொடர்பிலான சுவாரஸ்ய தகவல் ஒன்றை ஓபனாக கூறியுள்ளார் இயக்குநர் ஹரி. அதன்படி அவர் கூறுகையில்,


நாட்டில் 60 வீதமானோர் கெட்டவர்கள் 40 வீதமானோர் நல்லவர்கள். அவர்களை காப்பாற்ற சமூகத்தில் கெட்டது செய்பவர்களை தூக்கி போட்டு அடிக்க கூடிய குணம் கொண்ட ஒருவன் தான் ரத்னம். சினிமாவில் தான் இது போன்ற ஆட்களை பார்க்க முடியும். நிஜத்தில் இல்லை. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. நம்முடைய வலியை போக்கும் ஒருவனை தான் ஹீரோவாக காட்ட முடியும். அப்படிப்பட்ட  கதா பாத்திரம் தான் ரத்னம்.

சிங்கம், சாமி படங்களில் எந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததோ அதைவிட ரத்னம் படம் வெறித்தனமாக இருக்கும். என்னதான் பெரிய ஹீரோ, இயக்குனராக இருந்தாலும் எங்களுக்கும் பப்ளிசிட்டி தேவை. நாங்கள் ஒரு படம் எடுக்குறோம் என்றால் அதை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தால் தான் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு வரும் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஹரி.


Advertisement

Advertisement