• Dec 26 2024

அரசியல்வாதி மகன் வீட்டில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை... நாங்கள் அப்படி செய்யவில்லை- எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள் விளக்கம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த இளம்பெண் ரேகா, அரசியல் வாதி ஒருவர்  தன்னை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மீது உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ரேகா புகார் அளித்துள்ளார். அதில் அவர், "எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து தன்னை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும். இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந் நிலையில் மக்கள்  எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ,மருமகள் மீதும் கடும் கோபம் அடைந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் மனிதாபிமானம் அற்றவர்கள் ,கொடுமையானவர்கள் இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் திட்டி வருகின்ற நிலையில் ,


எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகளான மெர்லின் கண் கலங்கிய வண்ணம் ஒரு ஆடியோ போட்டுள்ளார் . "வணக்கம் என் பெயர் மெர்லினா இரண்டு , மூன்று நாட்களாக இந்த பிரச்சனை நடந்து கொண்டு இருக்கிறது. ஏன் நடக்கிறது என்று எனக்கு சத்தியமா புரியல ,நான் பிரஸ் மீடியாக்கு  எல்லாம் நான் சொல்வது ஒரு விஷயம் தான் நிறைய கமெண்ட்ஸ் , கெட்டபெயர் ,கூடாத கமெண்ட்ஸ் ,கூடாத வார்த்தைகள் பயன்படுத்தி தமிழ்ல திட்டுறீங்க , நடந்தது என்னவென்று தெரியாமல் இன்னொருத்திர தப்பா கதைக்க வேண்டாம் . 


அந்த பொண்ண நான் என்னுடைய வீட்டு பொண்ணா தான் பார்த்து இருக்கன். ரேகா பொண்ணு எனக்கு பாசமா கடிதம் எல்லாம் எழுதி தந்து இருக்காங்க , அவங்களுக்கு எதுவும் பிரச்சனை என்றால் என்னட்ட சொல்லி இருக்கலாம். எங்க பெயர் போனது நினைச்சி நான் கவலை படவில்லை என்னுடைய மாமா  எம்.எல்.ஏ கருணாநிதி பெயரும் போகுது அவர் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார் . நான் ரேகாவை என்னுடைய பொண்ணு மாதிரி தான் பார்த்தேன் , இப்பிடி எல்லாம் கொடுமை செய்யும் அளவிற்கு நாங்க ஒன்றும் மனசு இல்லாதவங்க இல்லை. இப்பிடி எல்லாம் கொடுமை படுத்தி அதில் சந்தோசமா இருக்கிறதுக்கு நாங்க ஒன்றும் மனிதாபிமானம் இல்லாதவர்கள் இல்லை என்று கண்ணீரோடு இந்த ஆடியோவை பதிவு செய்துள்ளார் .


Advertisement

Advertisement