• Dec 25 2024

களைகட்டும் கல்யாண வீடு! சோபிதா-சைதன்யா திருமணத்திற்கு படை எடுத்து வரும் பிரபலங்கள்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் தங்களது காதலை அறிவித்த நிலையில்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. 


இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 4-ஆம் திகதி அதாவது நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில் திருமண சடங்களுடன் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, சைதன்யா - சோபிதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாது. 


இவர்களின் திருமணம், நாகர்ஜூனாவின் குடும்ப முறைப்படி ஹைதராபாத்தின் பிரபலமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடக்க உள்ளது.  இவர்களின் திருமணத்திற்கு 300 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


டகுபதி, மெகா குடும்பங்கள்,மகேஷ் பாபுவின் குடும்பம், அமிதாப் பச்சன், ஆமிர் கான், பாலிவுட் நட்சத்திரங்கள், எஸ்.எஸ். ராஜமௌலி, மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் சிலர் என பிரபலமானவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.  சோபிதா - நாக சைதன்யா திருமண சடங்குகள் நடக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது.

Advertisement

Advertisement