• Dec 26 2024

என்ன மனுஷன்யா நீ... தன் கஷ்டத்தை புலம்பிய இளைஞனுக்கு பாலா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்! நெகிழ்ச்சி வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா.

இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.


அண்மையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.

இதை தொடர்ந்து, தன் சொந்த செலவில் மக்களுக்காக 5வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்து உதவினார், மாற்றுத்திறனாளிக்கு பைக் வாங்கிக் கொடுத்தார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பைக் வாங்க முடியாமல் கஷ்டப்படட இளைஞரின் ஆசையை நிறைவேற்றி உள்ளார் நடிகர் பாலா.


அதாவது, சமீபத்தில் பெற்றோல் பங்கில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் அங்கு பெற்றோல்  அடிக்க வந்த இளைஞர் ஒருவரிடம், அவரின் பைக்கே விலையை கேட்டுவிட்டு, தான் வீட்டில் காசு கேட்டால் செருப்பால் அடிப்பார்கள் என்றும், தன்னிடம் சைக்கிள் கூட இல்லை என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த வீடியோ மிகவும் வைரல் ஆனது.

இதனை பார்த்த பாலா, உடனடியாக குறித்த இளைஞனுக்கு பைக் ஒன்றை வாங்கி கொடுத்து உள்ளார். பலரும் பாலாவின் இந்த மனசுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement