கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு ,திரிஷா நடித்து vtv கணேஷ் தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படம் இன்றுவரை அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது. ஏ .ஆர் ரகுமானின் இசையில் வெளியாகிய இப் படத்தின் அத்தனை பாடல்களும் இன்றைய காலத்து காதலர்களை கூட ரசிக்க வைத்துள்ளது.
படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்திருந்தாலும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இப் படத்தின் 15 ஆண்டு நிறைவினை அனைவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கெளதம் வாசுதேவ் தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
இதைவிட தற்போது திரிஷா "இங்க என்ன சொல்லுது? "ஜெஸ்ஸி ஜெஸ்ஸி" சொல்லுதா..?" என குறிப்பிட்டு வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது இந்த படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ இதோ
Listen News!