• Dec 25 2024

ரோகிணி பணத்தை திருடும்போது விஜயா செய்த காரியம்? மீனாவின் புதிய மாற்றம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா திருமண மண்டபங்களுக்கு பூ அலங்காரம் செய்வதற்கான டெமோவை காட்ட, அதனை வெளியில் மார்க்கெட் பண்ணலாம் என்று ஸ்ருதி ஐடியா கொடுக்கின்றார். மேலும் அதற்கு நீங்கள் தான் விளம்பரப்படுத்த வேண்டும் என்று மீனாவை சூப்பராக ரெடியாக்கி விதம்விதமாக போட்டோக்களும் எடுக்கின்றார்கள்.

இன்னொரு பக்கம் சிட்டி ரோகினிக்கு கால் பண்ணி பிஏ   நிலைமை மோசமா இருக்குது. இப்படியே போனா அவனுடைய பிணத்தை உங்களுடைய வீட்டுக்கு முன்னுக்கு தான் கொண்டு வந்து போடுவேன். சீக்கிரமா காசு தர பாருங்க என்று மிரட்டி விட்டு வைக்கின்றார்.

d_i_a

இதனால் ரோகிணி வேறு வழியில்லை பார்வதி வீட்டில் இருக்கும் அந்த காசை தான் எடுக்க வேண்டும் என்று பிளான் போடுகின்றார். அதன்படியே பார்வதி வீட்டுக்கு சென்று அங்கு விஜயாவுக்கு ஐஸ் வைக்கின்றார். மேலும் பார்வதிக்கும் விஜயாவுக்கும் சாப்பிட கொடுத்துவிட்டு போன் கதைப்பது போல மேலே செல்கின்றார்.


அங்கு பார்வதி பீரோவில் இருந்த காசை எடுத்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாது போல மீண்டும் கீழே வந்து, இப்ப கிளம்பி போன டவுட் வரும் அதனால ஒன்றாக சேர்ந்தே போவோம் என பார்வதி, விஜயா உடன் நிற்கின்றார்.

இறுதியாக வீட்டில் மீனாவை விதவிதமாக போஸ் கொடுக்க வைத்து போட்டோ எடுக்கின்றார்கள். இதன் போது ரவி வர மீனா வெட்கப்படுகிறார். ஆனாலும் அதன் பின்பு முத்து மீனாவை வைத்து விதவிதமாக போட்டோஸ் எடுக்க வைக்கின்றார். அந்த நேரத்தில் மனோஜ், விஜயா, ரோகிணி ஆகியோர் வருகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement