• Apr 18 2026

'டெஸ்ட்' படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..! என்ன தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த சசிகாந்த், தற்போது இயக்குநராக அறிமுகமாகி இருக்கின்றார். வொய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வொய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கியுள்ளது. விக்ரம் வேதா , ஜிகர்தண்டா , மகான் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இந்த நிறுவனம், தற்போது ‘டெஸ்ட்’ என்ற தனித்துவமான கதையம்சம் கொண்ட படத்தை உருவாக்கியுள்ளது. 


இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அவருடைய கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், அவர் இப்படத்தில் எந்தவிதமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது ‘டெஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. தற்பொழுது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என படக்குழு கூறியுள்ளது.

இது இயக்குநர் சசிகாந்தின் முதல் படம் என்பதால் ‘டெஸ்ட்’ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கிரிக்கெட் பின்னணியில் ஒரு வித்தியாசமான கதையை சொல்லும் இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement