தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகி வரும் இளம் தலைமுறை திரைப்படம் ‘யூத்’ (Youth) குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் கென் கருணாஸ் முதன்முறையாக இயக்குநராகவும், அதேசமயம் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இந்த படம், பள்ளிப் பருவ நட்பு, காதல் மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கென் கருணாஸ், தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். இளம் தலைமுறையின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் ‘யூத்’ திரைப்படத்தை வடிவமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பது ஜி.வி. பிரகாஷ் குமார். இளமை, காதல், உணர்ச்சி ஆகியவற்றை இசை மூலம் அழகாக வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஜி.வி. பிரகாஷ், ‘யூத்’ படத்திற்கும் புதிய இசை அனுபவத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பாடலான “ஆச புள்ள” இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!