• Dec 26 2024

என்னடா சொல்லுறீங்க! வரலக்ஷ்மி இரண்டாவது மனைவியா? 15 வயதில் மகள்! வரலக்ஷ்மி காதலன் தொடர்பான ஷாக்கிங் தகவல்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி அவர்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து தற்போது திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் நிச்சியதார்த்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப்போகும் நிக்கோலய் சச்தேவ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


38 வயதான வரலட்சுமி சரத்குமார், இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. என பல்வேறு கிசுகிசு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை வரலட்சுமிக்கு ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 1ம் திகதி நடைபெற்றுள்ளது.


இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. நெருங்கிய உறவினர்கள் சூழ இந்த நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார் நிச்சயதார்த்தம் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவும் வெளியிட்டு இருந்தார்.


இந்நிலையில், வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம் செய்யப்போகும் நிக்கோலய் சச்தேவ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பையில் Art Gallery வைத்து நடத்தி வரும் நிக்கோலய் சச்தேவ்விற்கு ஏற்கனவே திருமணமாகி, 15 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாராம்.


பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார் நிக்கோலய் சச்தேவ். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார். இவருக்கு தற்போது 15 வயது ஆகிறது. முதல் மனைவி கவிதாவை விவாகரத்து செய்துவிட்டார் நிக்கோலய் சச்தேவ்.


இந்த நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருடன் நிக்கோலய் சச்தேவ்விற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. 


Advertisement

Advertisement