• Apr 23 2026

"துரந்தர் 2” ரிலீஸுக்கு முன் ஏற்பட்ட மாற்றம்… தமிழ், தெலுங்கு காட்சிகள் ரத்து.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் “துரந்தர் - தி ரிவெஞ்ச்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான “துரந்தர்” திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


அதில் சாரா அர்ஜுன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகம், இன்னும் அதிகமான எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது.

“துரந்தர் - தி ரிவெஞ்ச்” திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் படத்தின் டிரெய்லர் மற்றும் அப்டேட்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, அதிரடி காட்சிகளும், வலுவான கதையும் இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்த ஒரு முக்கியமான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் நடைபெறவிருந்த சிறப்பு காட்சிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் அந்தந்த திரையரங்குகளில் திரையிடப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பலரும் தங்களது மொழியில் படத்தை பார்க்க முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது, இந்த சிறப்பு காட்சிகள் ஹிந்தி மொழியில் மட்டுமே திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விருப்பமிருந்தால் ஹிந்தி பதிப்பை பார்க்கலாம் அல்லது அவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த திடீர் மாற்றம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement