• Jan 09 2025

1965 படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன? SK பற்றிய உண்மையை உடைத்து பேசிய பிரபலம்

Aathira / 19 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் களமிறங்குகின்றார் ஸ்ரீ லீலா.

சிவகார்த்திகேயனின் 25 வது படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கின்றார். மேலும் அதர்வா முரளி முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றாராம். இந்த படம் முதலில் புறநானூறு என்ற பெயரில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சூர்யா நடிப்பதாகவும் இருந்தது. அதன் பின்பு பெயரை மாற்றி 1965 புறநானூறு என வைத்துள்ளார்கள்.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2018 என்ற தலைப்போடு மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படமாகவும் காணப்பட்டுள்ளது.


இந்த நிலையில், 1965 பட ப் படிப்பு தளத்தில் நடந்தது என்ன? என்று வலைப்பேச்சு டீமில் உள்ளவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். அதன்படி அவர்கள் கூறுகையில்,   சிவகார்த்திகேயன் நடிக்கும் 1965 ஆம் படத்தின் கேரவனுக்கு பக்கத்தில் ஆபீஸ் ஒன்று போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் புதிதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


அதாவது ஆபீஸ் போடப்பட்டது எல்லாம் உண்மைதான். ஆனால் அது சிவகார்த்திகேயன் போடவில்லை. டான் பிச்சர்ஸ் தயரிப்பாளர் ஆகாஷ் தான் அதை போட்டு உள்ளாராம். அது எதற்காக எஸ்கேயின் ஆபிஸ் என்று பேசப்பட்டதற்கு காரணம், அவர் குறித்த ஆபிஸிற்குள் சென்று வந்துள்ளார்.

இதை பார்த்தவர்கள் அது சிவகார்த்திகேயனின் ஆபிஸ் என தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என  அந்தணன் தகவல் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement