இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18வது சீசனில் தமிழ் நடிகை போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்ட அதே நாளில் இந்த இந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றார்.
இந்தி பிக்பாஸில் இதற்கு முன்பு தமிழ் நடிகைகள் யாருமே கலந்து கொண்டது இல்லை. முதல் முறையாக ஸ்ருதிகாத்தான் இந்தி பிக் பாஸில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றார்.
ஸ்ருதிகாவுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக நிறைய விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால் வாரம் செல்ல செல்ல ஸ்ருதிகாவுக்கான ஆதரவு பெருகியது.
கடந்த வாரம் தமிழ் பிக்பாஸில் நடந்தது போலவே இந்தி பிக்பாஸில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. இதன்போது ஸ்ருதிகாவின் கணவரும் மகனும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே சென்றிருந்தார்கள். இதன்போதே ஸ்ருதிகா எமோஷனல் ஆன காட்சிகள் இணையத்தில் படுவைரலாகி இருந்தன.
இந்த நிலையில், இந்தி பிக்பாஸில் ஸ்ருதிகா வெற்றி பெற வேண்டுமென்று பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான புகழ் ஸ்ருதிகா வெற்றி பெற வேண்டுமென்று அவருக்கு வாக்களிக்குமாறும் அவருடைய சார்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அவருடைய வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Thank u @pugazhoffl
PLS VOTE & SAVE SHRUTIKA
#Shrutikarjun #tamilponnu #tamil #BiggBossTamilSeason8 #BiggBoss18 pic.twitter.com/YC99u6Ym6I
Listen News!