இந்திய சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் அதிகளவான படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்.
அனிமல், புஷ்பா மற்றும் சாவா போன்ற படங்களில் அவர் நடித்ததன் மூலம் மாபெரும் வசூல் வெற்றியைப் பெற்றதுடன் “வசூல் நாயகி” என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், தற்போது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கின்ற வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா சமீபத்தில் சிக்கந்தர் படத்தில் ஹீரோயினாக நடித்ததுடன் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்திருந்தார். இப்படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிக்கந்தர் படம் வெளிவந்தது. எனினும் எதிர்பார்ப்பை எட்டாத விதத்தில் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெறவில்லை.
தற்பொழுது பிரபல நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' திரைப்படத்திலிருந்து ராஷ்மிகாவை விலக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை சந்தீப் ரெட்டி இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் 'சிக்கந்தர்' படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே படக்குழு இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தத் தகவல் ராஷ்மிகா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!