தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் "ஜெயிலர் 2" படத்தில் பிஸியாகப் பணியாற்றி வருகின்றார்.
2023ல் வெளியான "ஜெயிலர்" திரைப்படம் உலகம் முழுவதும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ரஜினியின் ஸ்டைல், அனிருத் இசை என்பன படத்தின் வெற்றியை மேலும் மிளிரச் செய்தன. இதன் வெற்றியை தொடர்ந்து, தற்போது "ஜெயிலர் 2" உருவாகி வருகின்றது என்பதே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், "ஜெயிலர் 2" படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 'ஜெயிலர் 2' படக்குழு தனது அடுத்த கட்டப் படப்பிடிப்பை கேரளா மாநிலத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் உறுதியாகியுள்ளன.
கேரளாவின் இயற்கை அழகுடன் கூடிய அட்டப்பாடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த இடம் மலைப்பகுதி மற்றும் அடர்ந்த காடுகளால் பரிணமித்து இருக்கின்றது. இத்தகைய சூழலில் ரஜினிகாந்தின் அதிரடி சண்டைக் காட்சிகள், கதையின் முக்கியமான திருப்பங்கள் என்பவற்றை உருவாக்குவதற்கு படக்குழு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!