விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே பார்வதி. இவர் ஏற்கனவே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 9-இல் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால், நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் விதிமீறல் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. அதே சீசனில் போட்டியாளர் சான்றாவை காரில் இருந்து தாக்கிய சம்பவம் தொடர்பாக பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் வெளியேற்றப்பட்டனர்.. இதனால் அவர்கள் இருவரின் சினிமா பயணம் பாதிக்கப்படும் என அப்போது பேசப்பட்டது.
எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு விஜே பார்வதிக்கு வெப் சீரிஸ்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ‘முத்து என்ற காட்டான்' வெப் சீரிஸில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பார்வதி மற்றும் கம்ருதீன் இடையிலான காதல் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக வெளியில் செல்வது, அவுட்டிங் செல்லுவது, ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பது போன்ற நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜே பார்வதி தாய்லாந்தில் தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதற்கு “எவ்வளவு சூப்பராக வாழ்க்கையை என்ஜாய் செய்கிறார்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!