• Apr 19 2026

குக் வித் கோமாளி இல்லன்னா என்ன? சிரிக்க வைக்க வருகிறார் மாகாபா! புதிய சீசன்.. புதிய கெட்டப்..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ரீல்- ரியல் சின்னத்திரை ஜோடிகள் கொண்டு நடத்தப்படும் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக் பாஸ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஹிட்டான ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி விஜய் டிவி ரசிகர்களை கவர்ந்த தனித்துவமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி வித்தியாசமான கான்செப்ட், பிரபலங்களுக்கு சவால் விட்டு சிரிக்க வைப்பது, அட்டகாசமான டைமிங் என இந்த நிகழ்ச்சி ஹிட் அடித்து வந்தது.


சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு இந்த நிகழ்ச்சி தான் திருப்பு முனையாக அமைந்த நிலையில், அவர் படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரையில் காலடி பதித்தார். 

அவரைத் தொடர்ந்து மாகாபா ஆனந்த் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார். இரண்டு சீசன்களாக வெற்றி நடை போட்ட இந்த நிகழ்ச்சி, இடையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 


இந்த நிலையில் தற்போது 'அது இது எது' நிகழ்ச்சியின் புதிய சீசன் குறித்த ப்ரோமோ ஒன்று விஜய் டிவியில் வெளியாகி உள்ளது.

அதாவது மாகாபா ஆனந்த் இந்த ப்ரோமோவில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் நிலையில், சிரிப்பை வரவழைக்கும் இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement