• Jul 21 2026

தமிழில் அறிமுகமாக ரெடியான ஜான்வி கபூர்.. கடைசி நிமிடத்தில் வந்த சிக்கல்.! பின்னணி என்ன?

shali / 2 months ago

Advertisement

Listen News!

ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் தனது கவனத்தை திருப்பி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூத்த மகளான ஜான்வி, ஹிந்தி படங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், சமீப காலமாக தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதனால், அவர் எப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில், தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய தகவல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை குறும்பட இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக இளம் இசை உணர்வாளர் சாய் அபயங்கர் இணைந்துள்ளார்.

இந்த கூட்டணி தற்போது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, ஜான்வி கபூரின் தமிழ் அறிமுகம் அதிகாரபூர்வமாக உறுதியாகாது உள்ளதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 



Advertisement

Advertisement