• Feb 26 2025

சோகத்தில் தனுஷ் ரசிகர்கள்..! காரணம் என்ன..?

Mathumitha / 4 days ago

Advertisement

Listen News!

ராயன் ,பவர்பாண்டி திரைப்படங்களின் பின் தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படமாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. புது முக நடிகர்களை தனுஷ் இந்த படத்தில் களமிறக்கியுள்ளார். 


இப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் இசைவெளியீட்டு விழாக்கள் அனைத்தையும் இந்த புதுமுக நடிகர்களே மேற்கொண்டு வந்தனர். தனுஷ் இப் படம் சம்மந்தமாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை இதன் காரணத்தினை தனுஷ் சமீபத்தில் சொல்லியிருந்தாலும் படத்திலும் தியேட்டரிற்கும் தனுஷ் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர் இந்த எதிர்பார்ப்பினை தனுஷ் நிறைவேற்றாமையினால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


இந்த நிலையில் தனுஷ் தற்போது இட்லி கடை  ஷுட் முடித்துவிட்டு சென்னை வந்திருந்தார். இருப்பினும் neek படம் வெளியாகிய நேரத்தில் தனுஷ் ஹிந்தி பட ஷுடிங் ஒன்றிற்காக டெல்லி சென்றுள்ளமையினால் இவர் இந்த படத்தினை பார்வையிட தியேட்டர் வரவில்லை என்றும் இருப்பினும் அவரது இரு மகன்களும் படம் பார்ப்பதற்கு முதல் நாளே வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement