சினிமா துறையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா தற்போது YSR காங்கிரஸ் கட்சியில் முக்கிய அரசியல் தலைவராக இருக்கிறார். கடந்த ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஆட்சியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ரோஜா சமீபத்தில் ஒரு ஊடக உரையாற்றலின்போது துணை முதல்வர் பவன் கல்யான் மீது சுட்டெரிக்கும் விமர்சனங்களை சுட்டி காட்டியுள்ளார். "டைம் பாஸ்க்கு அரசியலுக்கு வராங்க. ஒரு நாள் ஷூட்டிங்கில் இருக்கிறார் இன்னொரு நாள் ஆன்மீக பயணம். இது போல அரசியல் செய்ய முடியாது" என பவன் கல்யானை ரோஜா தாக்கிப் பேசினார்.
மேலும் தமிழ் நடிகர் விஜய்க்கும் நேரடியாக ஒரு அறிவுரையை வழங்கிய ரோஜா “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நல்ல நோக்கத்துடன் வர வேண்டும். சிரஞ்சீவி மாதிரி கட்சி தொடங்கி பிறகு திடீரென காங்கிரசில் இணைத்துவிடக்கூடாது. அவரை நம்பியவர்கள் ரோட்டில் நிற்கின்றனர்” என்றார். "விஜய் சாருக்கு என்னோட சொல்... எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் மாதிரி பின்னால் வரும் மக்களுக்காக போராட வேண்டும். இடையில் கைவிட்டுவிடக்கூடாது. தொண்டர்களை ரோட்டில் விட்டுவிட்டு போகக்கூடாது," என குறிப்பிட்டார்.
ரோஜாவின் இந்த பேச்சுகள், தமிழ் மற்றும் தெலுங்கு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பி உள்ளன. விஜய் இந்த அறிவுரைக்கு என்ன பதிலளிக்கப்போவார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
Listen News!