• Apr 07 2026

என்னங்க விஜய் சாரு..அவருக்கு இப்போ தான் கூட்டம் சேர்ந்து இருக்கு!கூல் சுரேஷ் சர்ச்சை

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

துரை செந்தில்குமார் - லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவான திரைப்படம் லீடர். இதில் அவருடன் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரபல தொழில் அதிபராக திகழும் சரவணன் முதல் முதலில் விளம்பரங்களில் நடித்தார். இதன்போது அவருடைய தோற்றமும் மேக்கப்பும் படு விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்குப் பின்னர் முதல் முறையாக லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அவர் கிண்டலுக்கு உள்ளானார்.

அதற்குப் பின்னர் எப்படியாவது ஒரு வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார் லெஜண்ட் சரவணன். அதன்படி கருடன், எதிர்நீச்சல், கொடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமாருடன் கூட்டணி அமைத்தார்.


அவருடைய நம்பிக்கைக்கு ஏற்பவே லீடர் படமும் திரையரங்குகளில் பலரது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படம் முதல் நாளில் 75 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும், இதுவரை மொத்தமாக இரண்டு கோடியைக் கடந்திருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் லீடர் படம் பற்றி தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி அவர் கூறுகையில்,

"விஜய் சினிமாவிற்கு வந்து 50 படங்கள் நடித்த பிறகுதான் பிரபலமானார். ஆனால் எங்களுடைய லெஜண்ட் சரவணன் இரண்டு படங்களிலேயே அந்த இடத்தை பிடித்து விட்டார். அவருக்கு இன்று உருவான கூட்டம் மிகப் பெரியது. 

அதற்காக நான் விஜயைக் குறை சொல்லவில்லை. அவர் 50 படங்கள் நடித்த பிறகுதான் இவ்வளவு கூட்டம் சேர்ந்திருக்கிறது. ஆனால் என் தலைவனுக்கு இரண்டாவது படத்திலேயே கூட்டம் அள்ளிட்டு வந்திருக்கிறது" என்று கூறுகிறார்.

Advertisement

Advertisement