• Dec 26 2024

பாத்ரூம் கண்ணாடிக்கு முன்னால் மீனா செய்த விஷயம்.. கூடவே ரோகினியும் சப்போர்ட்?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலுக்கு என்று பெரும்பாலான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு காணப்படும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியல்களை விட, ரசிகர்களை கவர தவறிய சீரியல்களை சட்டென முடித்து அதற்கு பதிலாக புதுப் புது  சீரியல்களை களமிறக்கி ரசிகர்களை தன் பக்கம் வைத்திருப்பதில் ஆதிக்கம் காட்டுகின்றது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல், இளம் ஜோடிகளை வைத்து இதன் கதைக்களம் அமைந்துள்ளதோடு, இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தமது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நாயகியாக காணப்படும் மீனாவும் வில்லியாக காணப்படும் ரோகிணியும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த வீடியோ பாத்ரூம் கண்ணாடி ஒன்றிற்கு முன்னே நின்று எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் அலப்பறைகள் செய்வதாக காணப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பாத்ரூம் கண்ணாடியையும் விட்டு வைக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement