• Dec 26 2024

இந்த கௌரவத்தை விட வேறென்ன வேணும் பிரதீப்? விஜய் டிவியின் சர்ப்ரைஸ் பர்த்டே கிப்ட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப், ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் இன்று மட்டும் சமூக வலைத்தளங்களில் புகைந்து வருகின்றது.

அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றுதான் அருவி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதீப் ஆண்டனி. அத்துடன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

பல போராட்டங்களை சந்தித்து வந்த பிரதீப் ஆண்டனி, இயக்குனராகும் ஆர்வத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றினார். இவருக்காகவே பல ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள். ஆனாலும் இவருக்கு  திடீரென ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் படு மோசமாக பிக் பாஸ் நிகழ்ச்சியையும், கமலஹாசனையும் விமர்சித்து வந்தார்கள்.


பிரதீப் ஆண்டனிக்காக ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் பிக் பாஸ் பிரபலங்களும், நடிகர்களும் பல தரப்பில் இருந்து தமது கண்டனங்களை முன்வைத்து வந்தார்கள். இந்த பிரச்சனை பிக் பாஸ் கிராண்ட் பினாலே வரை தொடர்ந்தது.

பிக் பாஸ் சீசன் 7 கிராண்ட் பினாலே முன்னிட்டு அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களும் காணப்பட்டது. ஆனால் அதில் பிரதீப் ஆண்டனியின் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை.

இவ்வாறு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியதில் இருந்தே ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை முன்வைத்து, குரல் கொடுத்து வந்தார்கள்.


அதன் பின் பிரதீப்புக்கு  அடுத்தபடியாக அர்ச்சனா தான் டைட்டில் வின் பண்ண வேண்டும் என உறுதியாக பதிவுகளை பதிவு செய்து வந்தார்கள். அதன்படி அர்ச்சனாவும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை வின் பண்ணினார்.

இதை தொடர்ந்து வெளியே வந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நடந்த விடயங்களை உடைக்கத் தொடங்கினார்கள். அதனால் பிரதீப்பிற்கு சாட்டப்பட்ட குற்றம், அப்பட்டமான பொய் என்பது பலருக்கும் நிரூபனமானது

இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் இருந்து பிறந்தநாள் பரிசு ஒன்று பிரதீப் ஆண்டனிக்கு அனுப்பப்பட்டுள்ளது.


அதாவது விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஸ்டார் சார்பாக பிரதீப் ஆண்டனியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறி போக்கே ஒன்றையும் பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது பிக் பாஸ் ரெட் கார்ட் விஷயத்திற்கு பிறகு விஜய் டிவி சம்பந்தமாக  முதன்முதலாக தனது பிறந்தநாளுக்கு அனுப்பிய வாழ்த்து போட்டோவை ஷேர் செய்துள்ளார் பிரதீப் .


Advertisement

Advertisement