• Dec 26 2024

உங்க அப்பா வருவாரா? இல்லையா? ரோகிணியை ரவுண்டு கட்டி விளாசிய விஜயாவுக்கு எதிர்பாராமல் கிடைத்த கிஃப்ட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்

அதில், மீனாவையும் முத்துவையும் விஜயா வீட்டை விட்டுப் போகச் சொல்ல, இப்ப நாங்க வீட்டை விட்டு போகணும் அவ்வளவு தானே என மீனாவை துணி எல்லாம் எடுத்து வைக்க சொல்லுகிறார் முத்து. மேலும் அண்ணாமலையையும் தன்னுடன் வருமாறு அழைக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஆனாலும், டேய் அவர் எதுக்குடா கூப்பிடுற நீ போ என விஜயா முத்துவை திட்ட, அப்பாவை விட்டுட்டு எல்லாம் என்னால போக முடியாது. 30 வருஷமா அப்பா கஷ்டப்பட்டு இருக்கார். இப்ப விடுதலை கிடைச்சிருக்கு. நாம போய் சந்தோசமா இருக்கலாம் என அண்ணாமலையை கூப்பிட அவரும் எழுந்து அவர்களுடன் போக செல்கிறார்.

அவனை நம்பி போகாதீங்க என விஜயா சொல்ல, என் புள்ள கடல்ல குதிக்க சொன்ன கூட நான் குதிப்பன், முத்து சொன்ன மாதிரி நம்ம மூணு பேரோட உடுப்பையும் எடுத்து வை மீனா என அண்ணாமலை சொல்ல, வேறு வழியின்றி அமைதி ஆகிறார் விஜயா.


இதையடுத்து ரெஸ்டாரன்ட் வரும் ரவி, தயவு செஞ்சு யாரும் கல்யாணம் பண்ணிடாதீங்க. இப்படியே இருங்க என நண்பருக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.

இதை தொடர்ந்து எல்லாரும் ஒன்றாக சாப்பிட உட்கார, ரோகிணியிடம் மீண்டும் உங்க அப்பா எங்க?  இன்னும் வரலையா? அவர் வந்தாரா? இல்லையா? இல்ல பொய் சொல்லிட்டு இருக்கியா? எனக் கேள்வி மேல கேள்வியாக கேட்கிறார்  விஜயா.

அதற்கு என்ன பதில் சொல்வதென யோசித்துக்கொண்டிருந்த ரோகிணி, ஓடிப்போய் வாந்தி எடுக்க அவர் கர்ப்பம் என நினைத்துக் கொண்ட விஜயா, தங்கம் நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சு என ரோகிணியை கொஞ்சுகிறார்.  மனோஜின் கையை பிடித்து நீ சாவித்துவிட்டாய் என வாழ்த்து சொல்லி, மீனாவை சர்க்கரை கொண்டு வரச் சொல்லி எல்லார் வாயிலையும் போடுகிறார். ஆனாலும், முதல்ல போய் ஹாஸ்பிடல்ல கன்பார்ம் பண்ணட்டும் என அண்ணாமலை சொல்கிறார்.

அதன் பிறகு ரோகிணிக்கு விஜயா சாப்பாடு ஊட்டி விட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார். சாமி கும்பிடும் போது யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு நல்லாவே தெரியும் என மீனாவை பார்த்து நக்கலாக பேசிவிட்டு செல்கிறார் விஜயா.

அப்போ நம்ம வீட்டுக்கு சின்ன பாப்பா வரப்போகுதா? வேலையே  இல்லாத இவனுக்கு இந்த வேலை தேவையா என முத்து நக்கல் அடிக்கிறார். இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

Advertisement

Advertisement