• Dec 26 2024

பிக்பாஸ் வினுஷா தேவிக்கு மீண்டும் ஒரு சீரியல்.. தவறை உணர்ந்து பிராயசித்தம் தேடும் விஜய் டிவி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’பாரதி கண்ணம்மா’ சீரியல்களில் நடித்து அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வினுஷா தேவியை ஒரு கட்டத்தில் விஜய் டிவி கலாய்த்த நிலையில் தற்போது பிராயசித்தமாக விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்றாக ’பாரதி கண்ணம்மா’ முதல் சீசனில் ரோஷினி நடித்த கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் வெளியேறியதால் அவருக்கு பதிலாக நடித்தவர் தான் வினிஷா தேவி என்பது அறிந்ததே அதன் பின்னர் ’பாரதி கண்ணம்மா’ சீசன் 2 சீரியலில் நடித்த வினுஷா, கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஒருவராக கலந்து கொண்டார். 

அவர் அந்த நிகழ்ச்சியில் வெறும் 28 நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினாலும், அதன் பின்னர் அவரைப் பற்றி நிக்சன் கூறிய ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அதன் பின்னர் வினுஷா தேவி சிறப்பு விருந்தினராக உள்ளே வந்த போது நிக்சனிடம் வாதம் செய்தார் என்பதும் தெரிந்தது. 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வினுஷா தேவி எவிக்சன் ஆனபோது விஜய் டிவி அவரை கலாய்த்து தனது சமூக வலைதள பக்கத்தில் போட்ட ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் டிவிக்காக இரண்டு சீரியல்கள் நடித்த தன்னையே விஜய் டிவி கலாய்த்து விட்டதே அவர் என்று வினுஷா தேவி புலம்பியதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து விஜய் டிவி தன் தவறை உணர்ந்து ஒரு சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கியது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 

இந்த நிலையில் வினுஷா தேவியின் மனக்காயத்துக்கு மருந்து போடும் வகையில் தற்போது மீண்டும் ஒரு சீரியல் வாய்ப்பை வினுஷாவுக்கு விஜய் டிவி வழங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இதில் வினுஷா தேவிக்கு அட்டகாசமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement