• Dec 26 2024

திருமணமான அடுத்த நாளே கணவருக்காக வைஷ்ணவி செய்த காரியம்? நம்பவே முடியல..

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் வெற்றி வசந்த். இவர் நடித்த ஒரு சீரியலிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது இவருக்கு என்றே  மிகப்பெரிய பேன்ஸ் பேஜ்ஜும் காணப்படுகிறது.

சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் தானும் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பலரின் வாசற்படி ஏறி இறங்கி உள்ளார் வெற்றிவசந்த். ஆனாலும் எந்த ஒரு கதவும் அவருக்காக திறக்கவில்லை. இதனால் கஷ்டப்பட்டு பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இறுதியாக சினிமா ஸ்டூடியோ ஒன்றுக்கு வெளியேவே செக்யூரிட்டியாக வேலை செய்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன் பின்பு அவருக்கு எதிர்பாராத விதமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் வெற்றி.

d_i_a

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் சிறகடிக்க ஆசை சீரியல் குறுகிய நாட்களுக்கு உள்ளேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது வெற்றி வசந்தின் எதார்த்தமான நடிப்பு தான்.


இதைத்தொடர்ந்து சமீபத்தில் பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின்பு அடுத்தடுத்து திருமண நிச்சயதார்த்தமும் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இதில் பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில், வெற்றி வசந்த் வைஷ்ணவிக்கு கடந்த 28 ஆம் தேதி திருமணம் படு ஜோராக நடந்த நிலையில் திருமணம் ஆன அடுத்த நாளே தனது கணவருக்காக சமைக்க ஆரம்பித்துள்ளார் வைஷ்ணவி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement