• Oct 26 2024

விக்ரமின் தீவிர ரசிகன் தியேட்டரில் செய்த காரியம்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி, ஹரி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில்  இன்றைய தினம் வெளியாகி உள்ள படம்தான் தங்கலான். இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதோடு இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகி உள்ளதோடு இதில் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் உட்பட எல்லாருமே இரண்டாண்டு காலம் உழைத்து உள்ளார்கள்.

மேலும் இந்த படத்தில் செவிவழி மரபுக் கதைகள், வரலாறு, அரசியல், நாட்டார் தெய்வ வழிபாடு, இனவரவியல் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டு பா ரஞ்சித் புனையப்பட்ட மாய எதார்த்தவாத வரலாற்று படைப்பை படைத்துள்ளார்.


தற்போது தங்கலான்  திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் , தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியவாறு  காணப்படுகின்றது.

இந்த நிலையில், தங்கலான் படத்தை பார்ப்பதற்காக சியான் விக்ரமின் தீவிர ரசிகர் ஒருவர் தங்கலான் போலவே கெட்டப் அணிந்து தியேட்டருக்கு சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.


Advertisement