• Dec 26 2024

இனியாவுக்காக விமல் செய்த காரியம்.. சொந்த செலவில் சூனியம் வைக்கும் செழியன்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின்  இன்றைய எபிசோட்டில், இனியா காலேஜில் ப்ராஜெக்ட் செய்யவில்லை என்று யோசித்துக் கொண்டு நிற்கிறார். அங்கு வந்த விமல் இனியா போனில் ப்ராஜெக்ட் பத்தி கவலைப்பட்டு பேசியதால் அவருக்கான ப்ராஜெக்ட்டை செய்து கொண்டு கொடுக்க இனியா சந்தோசப்படுகிறார்.

இனியாவும் விமலும் சிரித்து பேசிக் கொண்டிருக்க, அங்கு பாக்கியா வருகிறார். இவர்களை பார்த்து விட்டு விமலிடம் நீ கோயம்புத்தூர் போகலையா என்று கேட்க, இல்லை நான் மாமாவுடன் பிசினஸ் பண்ணப் போகிறேன் என்று சொல்லுகிறார். விமல் போன பிறகு இனியாவிடம் உனக்கு டவுட் இருந்துச்சு என்றா  செழியன், எழில் இனியா கிட்ட கேட்கலாம் தானே என்று சொல்ல, நானும் விமலும் சும்மா தான் கதைச்சம்.  நீ பெருசா யோசிக்காத என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் இனியா, ஜெனி, பாக்கியா, எழில் ஆகியோர் கதைத்துக் கொண்டிருக்க, ஜெனி எழிலிடம் அமிர்தா ஏதும் சொன்னாங்களா என்று கேட்கிறார். அதற்கு இல்லை என்று சொல்ல, தான் பாப்பா கத்தும் போது அமிர்தாவை பேசி விட்டதாகவும் அதனால் அவர் தப்பா நினைத்து இருப்பதாகவும் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லும் படியும் அவர் சொல்ல, அமிர்தா ஒரு நாளும் அப்படி நினைக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார்.


இதைத் தொடர்ந்து செழியன் ஜெனியை வெளியே சாப்பிட கூட்டி  போக, பாக்கியா பாப்பாவா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லுகிறார். 

மறுபக்கம் ராதிகா வீட்டில் கமலா எல்லாருக்கும் சேர்த்து சப்பாத்தி செய்து இருக்க கோபி கிச்சனிலிருந்து சாப்பாடு கொண்டு வருகிறார். இதன் போது சாப்பிட்டீங்களா அம்மா என்று கேட்க, மதியம் சாப்பிட்டன் நைட்டுக்கு என்ன என்று தெரியல என்று சொல்ல, உடனே ராதிகா நாங்க ஏதோ உங்களை கொடுமை படுத்துற மாதிரி பேசுறீங்க என்று சொல்லுகிறார்.

அதற்கு கோபி நான் கிச்சனிலிருந்து சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுவோம் என்று சொல்ல, கமலா அப்படி என்றால் நான் சமைத்து வைத்தது என்ன செய்வது என்று கேட்டு, சாப்பாடு வாங்கி வார என்றா சொல்ல மாட்டீங்களா என்று கேட்கிறார். இறுதியில் இவர்கள் சண்டையில் பாக்கியா  எப்படித்தான் இத்தனை நாளா சமாளிச்சாவோ தெரியல என்று ராதிகா சொல்லி செல்ல, அதுவும் சரிதான் என கோபி யோசிக்கிறார்.

இதை அடுத்து ஜெனியும் செழியனும் ரெஸ்டாரண்டுக்கு வர அங்கு செழியன் ஜெனிக்காக டேபிளை அலங்கரித்து வைத்திருக்கிறார். இதை பார்த்து ஜெனி சந்தோஷப்படுகிறார்.

Advertisement

Advertisement