• Dec 26 2024

BRA காட்டினா என்ன தப்பு? ஆம்பளைங்க உடுப்பு போடாம நிக்கிறது நியாயமா? மாயாவுக்கு ஆதரவாக பேசிய வனிதா!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் கமல் அனைவரையும் வறுத்தெடுத்து விட்டார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மாயா சக போட்டியாளருக்கு தனது ப்ராவை எடுத்து காட்டிய விவகாரம் தொடர்பில் குரல் எழுப்பியுள்ளார் வனிதா விஜயகுமார்.

அதன்படி அவர் வழங்கிய பேட்டியொன்றில், பெண்கள் அணியும் ப்ரா என்கிறது தவறான விஷயம் இல்ல. ஆனா அத பாத்தி ஏன் தப்பான கண்ணோட்டத்த எதுக்கு எல்லாருக்கும் பரப்புறீங்க... அது தவறான விடயம் இல்ல. அத பத்தி நானே என் யூடியூப் சேனல்ல போட்டு இருக்கன்.எப்படி அத பாத்து வாங்கணும் என்று பெண்களுக்கு நிறைய அட்வைஸ் பண்ணி இருக்கன். அத்துடன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த எந்த குழந்தையும் அத பாக்காம வளந்து இருக்காது. ஏன்னா ஒரு குழந்தைய பெத்து எடுக்கிறது ஒரு பொண்ணு தான். அந்த குழந்த தாய்ப்பால் குடிச்சு தான் வளரும். அப்ப ஒரு குழந்த தன் தாயின் மார்பகத்தையும் ப்ராவையும் பாத்து தான் வளரும். அத கொச்சப்படுத்துற மாதிரி பாக்கவே வேணாம்...


பிக்பாஸ் வீட்டுலயும் அது ஜஸ்ட் ஒரு விளையாட்டா தான் செய்து இருக்காங்க. அத வைச்சு அசிங்கப்படுத்துற விஷயமே கெடையாது. அங்கு ஆம்பிளைங்களுக்கு முன்னால தான் உடுப்பு காயா போடணும்..அப்ப அதையும் பாத்து கமெண்ட் பண்ணி இருக்கலாம் தானே.

மேலும், ஒருத்தன் கதவ திறந்துட்டு யூரின் போறான். அவன் ஹிரோ..அவனுக்கு சப்போர்ட்டா ரெட் கார்ட் கொடுத்த விசயத்த தூக்கி பிடிக்கிறீங்க..சரி ஓகே.. அதேபோல இங்க இந்தியால ஒருத்தன் ரோட்ல கூட நின்று பாத்ரூம் போரான். அவனுக்கு எந்த தண்டனையும் இல்ல. சட்டமும் இல்ல. இதுவே சிங்கப்பூர்ல பண்ண ஏலுமா? உள்ள தூக்கிப் போடுவாங்க..அதே விஷயம் தான் பிரதீப் விவகாரத்துல.. அத தப்பா பாக்க தேவல. ஆனாலும் பேசிக் அறிவு கூட இல்லாம தான் ஒரே பாத்ரூம் விசயத்த பத்தி பேசுறாங்க. எனக்கு கடுப்பா இருக்கு..


அதேவேளை, தினேஷ் அப்படியொரு கேஸ் கொடுத்து இருக்க தேவல. அவர் ஸ்டோங்கான போட்டியாளர். உள்ள நிறைய விஷயம் நடந்து இருக்கு..அதுல எதாவது எடுத்து இருக்கலாம்..அத்துடன், மேல உடுப்பு போடாம ஆம்பள வந்து நிக்கலாம்.. இதே ஒரு பொண்ணு ப்ராவ காட்டினா தப்பா.. என விளாசி தள்ளியுள்ளார் வனிதா.

Advertisement

Advertisement