அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படம் எதிர்வரும் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரிஷாவை ஊடகவியலாளர் ஒருவர் "படம் எப்போது வெளியாகும்?" என்ற கேள்விக்கு.பதிலளிக்கும் போது திரிஷா வேடிக்கையாக கூறினார். "அப்புடியா எப்போ ரிலீஸ்;சத்தியமா அது எனக்கு தெரியாதுங்க ப்ரொடியுசருக்கு தான் தெரியும்" என அசால்டாக சொல்லி சென்றுள்ளார்.
திரிஷாவின் அசால்ட்டான பதில் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.மற்றும் தற்போது இப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்ற செய்தி ஒன்றும் பரபரப்பாகி வருகின்றது.
Listen News!