• Dec 25 2024

ஹீரோவானதும் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாரே..! நடிகை கை கொடுக்க கூல் சுரேஷ் செய்த சேட்டை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளவர் தான் கூல் சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை ஈர்த்திருந்தார்.

கூல் சுரேஷின் காமெடி கலந்த பேச்சு அவரது துடிதுடிப்பான செயற்பாடுகளும் ரசிகர்கள் பலருக்கும் பிடித்து போனது ஒன்று. அத்துடன் இவர் சிலம்பரசன், சந்தானம் ஆகியோருக்கு நண்பராகவும் மிகப்பெரிய ரசிகராகவும் காணப்படுகின்றார்.

தியேட்டர்களில் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு அந்த கெட்டப்பிலேயே சென்று அசத்தியிருப்பார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு கூல் சுரேஷின் கெட்டப்பை பார்த்து பலரும் வாய்விட்டு சிரித்துள்ளார்கள்.


தற்போது மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் டிடிஎப் வாசன் ஹீரோவாக நடிப்பதற்கு இருந்தார். ஆனாலும் இயக்குனருக்கும் அவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டிடிஎஃப் வாசன் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். 

இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தின் ப்ரோமோஷன் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் பிரபல நடிகை சஞ்சனாவிடம் கூல் சுரேஷ் சேட்டை செய்த சம்பவம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சஞ்சனா கூல் சுரேஷுக்கு கை கொடுக்க கூல் சுரேஷ் அவரது கையைப் பிடித்து சுத்திக்கொண்டே இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் இப்பவே ஆட்டத்தை காட்டிட்டாரே என கிண்டல் அடித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement