• Feb 28 2025

ஆயிஷா இருக்கிற இடமே கலகலன்னு இருக்கும்.. அவங்க டைரக்ஷன் பண்ணலாம்.! பொன்வண்ணன் பளீச்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான இணையத் தொடர் தான் 'உப்பு புளி காரம்'. இந்தத் தொடர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பானது.

குறித்த தொடரில் பொன்வண்ணன் , வனிதா ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இதனை விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்க, ரமேஷ் பாரதி இயக்கியிருந்தார்.

நவீன தலைமுறையில் ஏற்படும் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதை களத்துடன் உருவாகியிருந்த இந்த தொடர் இளைஞர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது. இதில் எமோஷனல், காமெடி என பல திருப்பங்களுடன் இந்த வெப் சீரிஸ் பிரபலமாக காணப்பட்டது.


இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கிய பொன்வண்ணன் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன்படி இதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடரின் மூலம் பிரபலமானவர் ஆயிஷா. இவரும் உப்பு புளி காரம் தொடரில் நடித்துள்ளார். 

இவரைப் பற்றி பொன்வண்ணன் கூறுகையில், ஆயிஷா இருக்கிற இடமே கலகலன்னு இருக்கும். இந்த தொடரிலும் சரி ஆயிஷாவின் நிஜ கேரக்டரில் சரி அவர் ஒரே மாதிரி தான் இருக்கின்றார். அவரை சுற்றி இருக்கும் இடம் எப்போதும் பாசிட்டிவ்வா இருக்கும். தூரத்தில் இருந்தாலும் அவர் சிரிக்கும் சத்தம் ஆகியவை சுற்றியுள்ள இடத்தையே ரணகளம் ஆக்கிவிடும்.


அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் சீரியல் இன் கதாநாயகி ஆன அஷ்வினிவும் இதில் நடித்துள்ளார். அவரைப் பற்றி பொன்வண்ணன் கூறுகையில், இவர் மிகவும் சமமான ஒரு பர்சன். சிரிக்கும் போது கூட பக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த வித டிஸ்டர்பும் இல்லாமல் மிகவும் பக்குவமாகவே சிரிப்பார் தெரிவித்துள்ளார்.

மேலும் தீபிகா பற்றி கூறுகையில், இவர் ரொம்ப ஷார்ப்பான பர்சன். இவங்க நடிப்பதை தாண்டி   கிரியேட்டிவிட்டியா நிறையவே யோசிப்பாங்க. டெக்னிக்கல் ரீதியாகவும் சரி.. இதனால தீபிகா நடிப்பை தாண்டி டைரக்ஷனிலும் ஆர்வம் காட்டினா.. பின் நாட்களில் தயாரிப்பாளராக கூட வருவார் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement