• Dec 27 2024

உங்க இரண்டு பேருக்கும் இடையில வந்தது யாரு? பிரபலம் கேட்ட ஒரு கேள்வி.! அதப்பத்தி பேசாதைங்க ப்ளீஸ் - மன்றாடிய பப்லு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ்.இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். 

தன்னை விட 27 வயது குறைவான பெண்ணுடன் பப்லு பிரித்விராஜ் உறவில் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.


என்னுடைய வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாம் எனக்கு புரிகிறது என தாங்கள் பிரிந்ததை பட்டும் படாமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர்களது பிரிவு தொடர்பில் பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் தகவலொன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், 'அவர்களது விஷயம் குறித்து கேட்பதற்காக பப்லுவுக்கு போன் எடுத்தன். ஆனாலும் அவர் போன் எடுக்க மாட்டார் என நினைச்சன். ஆனால், பப்லு போனை எடுத்து மிகவும் தெளிவாக பேசினார். 

அப்போ,உங்களுக்கும் ஷீத்தலுக்கும் இடையில யார் வந்தது? என கேட்டன். ஆனா அவர், என் தனிப்பட்ட விஷயத்தை பொது இடத்தில் சொல்ல விரும்பல.. அத பற்றி பேசாதைங்க.. இப்போ எனக்கு சினிமால இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி இருக்கு. அத பற்றி பேசுங்க என்றார்.

மேலும், இப்போ வெளியான அனிமல் படத்தில் நடிச்சிருக்கன், அடுத்து விஜய் சேதுபதியின் படத்திலும், மிஸ்கினுடன் ஒரு படத்திலும், வெப் தொடர் ஒன்றிலும் கமிட்டாகி இருக்கன். 


இதுமட்டுமில்லாமல்இ தெலுங்கு படம் ஒன்றிலும் முக்கிய வில்லனாக நடித்து வருகிறேன். இனிமேல் நான் சினிமாவை தான் காதலிப்பேன்' என பப்லு கூறியதாக வித்தகன் அந்த பேட்டியில் தெரிவிதுள்ளார்.


 

Advertisement

Advertisement