• Dec 27 2024

மாயாவின் கட்டிப்புடி வைத்தியம்.. ஹைலைட்டான கமலின் வார்த்தை! இதையும் கவனிச்சீங்களா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது.  அதிலும், வார இறுதியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே பெரும் கூட்டம் காத்திருக்கும். அதே போன்று, இந்த வாரமும் பிக் பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்கியுள்ளார் கமல்.

இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்பதை உணராமல் வழமைபோல வீக்கென்ட் டிராமா போட்டுள்ளார் பூர்ணிமா.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமாவை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என விஷ்ணு பேசியதை, ரீ என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா மொத்தமாக போட்டு உடைத்தார்.

அத்துடன், பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்தும் பூர்ணிமாவுக்கு மன அழுத்தம் அதிகரித்த நிலையில், இறுதியில் அவர் உடைந்து அழுது விட்டார்.


மேலும், மாயாவை லெஸ்பியன் என பேட்டி ஒன்றில் சுசித்ரா சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து மாயாவும் பூர்ணிமாவும் ஒன்றாக இருந்து வரும் நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

இதையெல்லாம் தெரிந்துக் கொண்டு உள்ளே நுழைந்த விஜய் வர்மா பூர்ணிமா மனசு புண்படும்படி எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டார்.

இவ்வாறான நிலையில், புல்லி கேங் என சொல்லப்படும் மாயா கேங்கில் அவரது ரைட் ஹேண்டாக செயல்பட்டு வரும் பூர்ணிமா கதறி அழுததை பார்த்ததும் மாயாவுக்கு மனசு கேட்கவில்லை.


 இதை தொடர்ந்து, நான் தான் இருக்கேன்ல ஏன் கண்ணீர் சிந்துற என கதறி அழுத மாயாவை கட்டிப்பிடித்து மாயா தேற்றிய காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

இதேவேளை, பிக் பாஸ் சீசன் 7இல் பங்குபற்றிய போட்டியாளர்கள் தரமற்றவர்கள் என்பதை கமல் சாரே ஒப்புக் கொண்டது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement