• Feb 25 2025

சமந்தாவின் சீக்ரெட் காதலன் யார்? சந்தேகத்தை கிளப்பிய சர்ச்சை புகைப்படம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய், விக்ரம் என்று மாஸ் ஹீரோக்குளுடன் இணைந்து நடித்து பிரபலமானவர்தான் நடிகை சமந்தா. ஆனால் தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி வெப் சீரிஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்பு கவர்ச்சியை கூட்டிய சமந்தா,  தற்போது தனது சினிமா பயணத்தை திட்டமிட்டபடியே தொடர்ந்து வருகின்றார். மேலும் இவர் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டன.

d_i_a

அதன்படி நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ஒருவரை காதலிப்பது ஆகவும் அவருடன் டேட்டிங் செல்வதாகவும் சமீபத்தில் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இது தொடர்பில் சமந்தா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.


இந்த நிலையில் காதலர் தினமான இன்றைய தினம் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் ஒரு நபருடன் இணைந்து ஜூஸ் குடிக்கின்றார். ஆனால் அந்த போட்டோவில் இருவரின் கைகள் மட்டும் தான் தெரிகின்றது. இதனால் சமந்தாவின் சீக்ரெட் காதலர் யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

மேலும் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் இறுதியில் ஹார்ட் போட்ட சிம்பல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே சமந்தா காதலில் விழுந்தாரா? கூடிய விரைவில் இது பற்றிய அறிவிப்பை வெளியிடுவாரா? என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement