• Dec 26 2024

ஒரே வருடத்தில் ரூ.100 கோடி வருமானம் பார்த்த குஷ்பு? பொறாமையால் முடிவெடித்த ராதிகா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பு  திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ராதிகா திரையில் பெரிய நட்சத்திரமாக இருந்தார் என்றும் ஆனால் தற்போதைய நிலையில் குஷ்பு  பாஜகவில் சேர்ந்த ஒரே ஆண்டில் பல்வேறு திட்டங்களில் கிடைத்த கமிஷனில் 100 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகவும் அதனால்தான் ராதிகா திடீரென தனது கணவரிடம் கூறி பாஜகவில் இணைந்ததாகவும் அரசியல் வதந்திகள் வேகமாக பரவி வருகிறது.

சன் டிவியில் தற்போது ராதிகாவின் ரேடான் டிவிக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவருக்கு வருமானம் குறைந்துள்ளதாகவும் திரையுலகிலும் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்குமே குறிப்பிட்டுச் சொல்லும் படி தற்போது வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் திரை உலகில் இருந்து விலகினாலும் குஷ்பு  பாஜகவில் சேர்ந்ததால் அவருக்கு கிடைத்த சில பதவிகளின் மூலம் ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாக ராதிகாவுக்கு யாரோ கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் தன்னுடைய திறமை மூலம் பாஜகவில் இணைந்து அரசியலில் களமிறங்கினால் தனக்கும் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் ராதிகா பாஜகவில் இணைந்து விட்டதாகவும் இதற்காக தான் தனது கணவரிடம் கட்சியை பாஜகவில் இணைத்து விடும்படி ஐடியா கொடுத்ததாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் இது முழுக்க முழுக்க பொய் என்றும் ராதிகா பல தலைமுறைகளுக்கு சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டார் என்றும் அவர் பணத்திற்காக அரசியல் கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement