• Dec 26 2024

ஆர்ஜே பாலாஜி நிபந்தனையால் அதிர்ச்சி அடைந்த வேல்ஸ் நிறுவனம்.. ‘மூக்குத்தி அம்மன் 2’ பின்னணி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஆர் ஜே பாலாஜி நடித்த இயக்கிய ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தால் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து ’மூக்குத்தி அம்மன் 2 ’ படம் குறித்து ஆர்ஜே பாலாஜிடம் வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது ஆர்.ஜே பாலாஜி சில நிபந்தனைகளை விதித்ததை கேட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

’மூக்குத்தி அம்மன் 2’  படத்தை நடித்து இயக்கி தருவதற்கு எட்டு கோடி ரூபாய் ஆர்ஜே பாலாஜி சம்பளம் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்புக்கொண்ட நிலையில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் தனக்கே தந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது.



ஆர்ஜே பாலாஜியின் இந்த நிபந்தனைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஐசரி வேலன் இந்த படத்தை நீங்கள் இயக்க வேண்டாம் சென்று வாருங்கள் என்று அனுப்பி விட்டதாகவும், இதனை அடுத்து அதே கதையை ’மாசாணி அம்மன்’ என்ற டைட்டிலில் ஆர்ஜே பாலாஜி இயக்க இருப்பதை அறிந்து உடனடியாக ’மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

’மூக்குத்தி அம்மன் 2 ’படத்தை இயக்குவதற்கு பிரபல இயக்குனர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ’மாசாணி அம்மன்’ படத்தை விட ஒரு ரூபாயாவது அதிகம் ‘மூக்குத்தி அம்மன் 2’ வசூல் செய்ய வேண்டும் என்ற ஐசரி கணேஷ் சவால் விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement