• Apr 23 2026

அனிருத் ஹீரோவாக களமிறங்குவாரா? அவரே சொன்ன உண்மை.! என்ன தெரியுமா.?

shali / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், சமீபத்திய பேட்டியில் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


இசை உலகில் இளம் வயதிலேயே அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்தை எட்டியவர் அனிருத். பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி வருகிறார். 

அவரது பாடல்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுவது சாதாரண விஷயமாகிவிட்டது. இப்படிப்பட்ட வெற்றிகளுக்கு மத்தியில் கூட, நடிகராக மாறும் எண்ணமே இல்லையென அவர் தெளிவாக கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதாவது சமீபத்திய நேர்காணலில் கலந்து கொண்டு, " நான் ஒருபோதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன். இசை தான் என் உலகம்.... இன்னும் பல சாதனைகள் செய்ய வேண்டும். " என்று கூறியுள்ளார் அனிருத். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement