• Jun 03 2026

‘கட்டா குஸ்தி 2’ முதல் பாகத்தை மிஞ்சுமா.? வெளியான அதகள அப்டேட் இதோ..

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ள நடிகர்தான் விஷ்ணு விஷால். இவருடைய நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம், குடும்ப உணர்வுகளோடு காமெடி மற்றும் விளையாட்டு அம்சங்கள் கலந்த திரைக்கதையின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சுமார் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். அதோடு முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


மேலும், இந்த முறை நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளார். அவர் இதில் ராஜ ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், யோகி பாபுவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த முக்கிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 5.06 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் போலவே இந்த படமும் ரசிகர்களை கவருமா? அல்லது அதைவிட பெரிய வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement