• Apr 23 2026

மனோஜின் எங்கேஜ்மென்ட் நடக்குமா.? கண்ணீர் வடித்த ரோகிணி.! நீதிபதி வைத்த செக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில், மீனாவும் சிந்தாமணியும் பூ வியாபாரிகள் தேர்தலில் போட்டியிட, அதில் மீனா வெற்றி பெறுகின்றார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் மீனாவுக்கு அதிக  வாக்குகள் கிடைத்து அவர் வெற்றி பெறுகின்றார். இது விஜயாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக காணப்படுகிறது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதை  களத்துடன் ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.

அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில், நீதிமன்றத்தில் மனோஜின் டிவோஸ் கேஸ் வரும்போது, அங்கு ரோகிணி தன்னுடைய மகனையும் அழைத்து வருகின்றார். அதில் நீதிபதி கேஸ் நடக்கிற இடத்திற்கு எதற்கு பையனை கூட்டி வந்தீர்கள் என்று கேட்க, நானும் என் பையனும் அந்த குடும்பத்தோட ஒன்னா வாழனும் என்று ஆசைப்படுகின்றேன். 


மேலும் மனோஜுக்காக நான் நிறைய கடன் வாங்கி இருக்கிறேன். எனக்கு வாழ்றதுக்கு வழியே இல்லை ஐயா என அழுகின்றார். இதனால் இன்னும் ஆறு மாசத்திற்கு இவர்களுடைய  வழக்கை ஒத்திவைக்கின்றார் நீதிபதி.

மேலும் கல்யாணிக்கு தேவையான பொறுப்புகளையும் செலவுகளையும் மனோஜ் ஏற்று பார்த்துக்க வேண்டும். அத்துடன் மாதம் 25 ஆயிரம் ரூபாய் கல்யாணியின் செலவுக்கு அவர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கின்றார்.

அதற்கு பின்பு மனோஜ், அம்மாவிடம் நாளைக்கு எங்கேஜ்மென்ட் இருக்கு என்று சொல்ல, அது நடக்க வேண்டும் என்றால் இங்கு நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று மீண்டும் உண்மையை  மறைக்க முயற்சிக்கின்றார்கள். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement