கர்நாடக திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி 5 ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு விடுதலை பெற்றுள்ளார்.
இந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு தற்பொழுது கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி, சஞ்சனா கல்ராணிக்கு முழுமையான விடுதலை அளித்துள்ளது. 2020-ல் கர்நாடக காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு நடத்திய மாபெரும் விசாரணையின் போது திரையுலக பிரபலங்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்பை கண்டுபிடித்ததாக கூறப்பட்டது.
அந்தப் பட்டியலில் சஞ்சனா கல்ராணியும் இருந்ததாக கூறி அவரை செப்டம்பர் 2020-ல் பொலீசார் கைது செய்தனர். இந்த தகவல் தென்னிந்திய திரையுலகை பெரிதும் அதிரவைத்தது. அத்துடன் அவர், "இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சோதனை என்றார். மேலும் என் மீது எந்த குற்றமும் இல்லை என்பதற்கு இன்று நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு முக்கியமான நிரூபணமாகும். நான் நன்றி தெரிவிக்க விரும்பும் முதன்மையானவர்கள் என் வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர்" என்று கூறியுள்ளார்.
சஞ்சனா கல்ராணி, கன்னடா மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முக்கியமான படங்களில் நடித்துள்ளார். இவரது விடுதலையின் பின் அவர் திரையில் மீண்டும் நடிக்க வருவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!