பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபியைப் பாத்த செழியன் டாடி என்னாச்சு என்று கேக்கிறார். அதுக்கு கோபி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்லுறார். இதனைக் கேட்ட ஈஸ்வரி என்ன இப்புடிச் சொல்லுற உனக்கு இப்படி எத்தினையாவது தடவ நடக்குது தெரியுமா என்று சொல்லுறார். மேலும் உனக்கு ஏதாவது நடந்தால் என்ன பண்ண முடியும் என்று கேக்கிறார். இதனை அடுத்து செழியன் கோபிய ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லிச் சொல்லுறார். அதுக்கு கோபி ஹாஸ்பிடல் எல்லாம் வேணாம் என்று சொல்லுறார்.
மேலும் பாட்டி போன் எடுத்ததும் ரொம்பவே பயந்திட்டன் என்று செழியன் சொல்லுறார். இதனை அடுத்து ஈஸ்வரி இனியாவப் பாத்து என் கண்ணு முன்னாடியே கோபிய இழக்கோணும் என்று நினைக்கிறியா என்று கேக்கிறார். அதுக்கு இனியா இல்ல பாட்டி நான் என்ன பண்ணினான் என்று கேக்கிறார். இதைக் கேட்ட கோபி ப்ளீஸ் அம்மா இனியாவ ஒன்னும் சொல்லாதீங்க என்று சொல்லுறார்.

மேலும் தனக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயமா இருக்கு என்கிறார் கோபி. மேலும் அப்புடி எனக்கு ஏதாவது ஆகுறதுக்கு முன்னாடி இனியாவுக்கு கலியாணம் நடக்க வேணும் என்று சொல்லுறார். இதைக் கேட்ட ஈஸ்வரி இனியாவப் பாத்து உன்ர அப்பாவுக்கு நிம்மதி கொடுக்க வேணும் என்று தோணலையோ என்று கேக்கிறார். அதனை அடுத்து இனியா கலியாணத்துக்கு சம்மதம் சொல்லுறார்.
இதைத் தொடர்ந்து மாப்பிள வீட்டுக்காரங்க முன்னாடி நான் எதுவும் கதைக்கமாட்டேன் என்று பாக்கியா சொல்லுறார். பின் மாப்பிள வீட்டுக்காரர் வந்து நிக்கிறார்கள். இதனை அடுத்து மாப்பிள்ளையோட அப்பா சுதாகரப் பாத்து பாக்கியா ஷாக் ஆகுறார். அதைத் தொடர்ந்து எல்லாரும் சந்தோசமாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!