• Apr 23 2026

‘தாய் கிழவி’ இரண்டாம் நாள் வசூல் இரட்டிப்பா.? – பவுனு தாயி நடிப்புக்கு பாராட்டு மழை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 

இந்தப் படத்தில் 'கலையரசி' ராதிகா மையக் கதாபாத்திரமான பவுனு தாயியாக நடித்துள்ளார். அவரது இயல்பான மற்றும் வலுவான நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசனும் படக்குழுவினரை பாராட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் சிவக்குமார் முருகேசனின் அடுத்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


காமெடி மற்றும் பெண்களின் வலிமையை பேசும் கதைக்களம் கொண்ட இப்படம் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், தாய் கிழவி படத்தின் வசூல் விவரங்களின்படி, படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.2.65 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் ரூ.4.65 கோடி வசூலாகி, முதல் நாளை விட இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement