நடிகர் ஸ்ரீகாந்த், 25 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் தன்னை நிலைநிறுத்தி வரும் நடிகர். இவர் சமீபத்தில் நடந்த " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " படத்தின் பாடல் வெளியீட்டின் போது அளித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதில் என் திரையுலகப் பயணம் மக்கள் ஆதரவால் தான் 25 ஆண்டுகள் நீடித்துள்ளது என்றார்.
மேலும் ஸ்ரீகாந்த் அதில் கூறியதாவது, எனக்கு மிகவும் பிடித்த படம் ‘சதுரங்கம்’. அது தான் நான் முதல் முறையாக நடித்த திரைப்படம். அந்த திரைப்படத்தை பூஜை அன்னைக்கே கொன்று விட்டார்கள் என்றார். அத்துடன் எல்லாரோட உழைப்பும் போய்விட்டது என்று ஸ்ரீகாந்த் வருத்தத்துடன் கூறினார்.
அத்துடன் அவர், “12 வருடங்களுக்குப் பிறகு "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" படம் ரிலீஸ் ஆகப் போகிறது. மக்கள் யாருக்கு என்னை பிடிக்குமோ தெரியாது” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட படக்குழுவினரும், ரசிகர்களும் ஸ்ரீகாந்த் பேச்சுக்கு உற்சாகத்துடன் கரகோஷம் செய்தனர். தற்போது கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் படத்தின் ரிலீஸுக்கு தயாராக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஸ்ரீகாந்த் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், தற்பொழுது வெளியாகவுள்ள படம் அவருக்கு முக்கியமானதாக இருப்பது அவரது உணர்வுபூர்வமான பேச்சிலிருந்து தெரிகிறது.
இந்த படம் இறுதியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகவுள்ள ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்குமா என்பது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!