வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
‘அரசன்’ திரைப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ‘அரசன்’ படப்பிடிப்பு குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் 14 நாட்களும், சென்னையில் 40 நாட்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. தற்போது இரவு நேர காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தற்போது நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் பிரியங்கா மோகன் பங்கேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா, அமீர் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தீபாவளி வெளியீடாக வெளியிட படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!