• May 21 2026

தானே வண்டி ஓட்டிய CM விஜய்.! தவெக தொண்டர்களை டென்ஷன் ஆக்கிய ப்ளூ சட்டை

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்று மக்களுக்கான சேவைகளை தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி தினமும் புதிய திட்டங்கள், ஆய்வுகள், கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் என கடும் பிஸியாக செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதன்படி, தமிழ்நாட்டின் மருத்துவத் துறைக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட 40 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விஜய் வழங்கியுள்ளார். மேலும், அந்த வாகனங்களின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்வதற்காக அவர் தானே ஒரு வாகனத்தை ஓட்டி பார்த்தார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதையடுத்து, “மக்களுக்காக நேரடியாக களமிறங்கிய முதல்வர்” என பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இதை விமர்சிக்கும் வகையிலும் சில கருத்துகள் வெளியாகின.


இந்த நிலையில், பிரபல பத்திரிக்கை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இதை கிண்டலடிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “தன் கையால் தானே மதிய உணவு சாப்பிட்டதை தொடர்ந்து, தன் கையால் தானே வண்டி ஓட்டியுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு தற்போது தவெக தொண்டர்கள் பலரும் சரமாரியான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement