• Apr 04 2025

விக்ரம் படம் மார்ச் 27 வெளியாகுமா..? இல்லையா..?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

அருண் குமார் இயக்கத்தில் றியா சிபு இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் " வீர தீர சூரன் " இப் படத்தினை HR Pictures தயாரித்துள்ளதுடன் முன்னனி இசையமைப்பாளர் ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் படம் குறித்து பல அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.


இப் படம் மார்ச் 27 வெளியாகுமா ? இல்லையா ? என ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது படத்தின் சட்லைட் விற்பனை செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக படம் வெளியாகாது என பலர் கூறியிருந்தனர். மேலும் இந்த திகதியில் எம்புரான் மற்றும் ஹரி ஹர வீரப்பன் போன்ற படங்கள் வெளியாவதால் தியேட்டர் வாய்ப்புகள் கிடைக்காது என்கின்ற ஒரு தகவலும் வெளியாகியிருந்தது.


இந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து படத்திற்கான சென்சார் ரிப்போர்ட்டும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படம் மார்ச் 27 வெளியேற்றத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement