• Dec 27 2024

விஜய் இல்லைனா.. சினிமாத் துறைக்கு ஒன்னும் நடக்காது! கஸ்தூரி பளீச் பேட்டி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது.

பொதுவாகவே சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு கட்டத்தில் அரசியலுக்குள் நுழைந்து அதிலும் வெற்றி கண்டு வருகின்றார்கள்.

அந்த வரிசையில் தற்போது விஜயும் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். இது ஆரம்பிக்கப்பட்டபோது பல்லாயிக்கணக்கான ரசிகர்கள் அவரது கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டார்கள்.

இந்த நிலையில், தற்போது விஜய் சினிமாவை விட்டு வெளியேறினால் எந்த பாதிப்பும் சினிமாவுக்கு இருக்காது என்று நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், விஜய் கடந்த 30 ஆண்டுகளாகவே பெரிய ஸ்டாராக சினிமாவில் இருக்கின்றார். ஆனால் சினிமா கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது பயணத்தை தொடங்கி விட்டது. இதனால் சினிமா ஒரு ஆளுக்காக எல்லாம் நிற்காது அது தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமா என்பது ஒரு கலை அது அனைவரது பங்களிப்பையும் சேர்த்து வளருமே தவிர பாதிப்பு என்பது அந்த கலைக்கு எப்போதுமே வராது. இவ்வாறு விஜய் இல்லை என்றால் சினிமா துறை பாதிக்காது என்று அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement